விடுதலைக்காக ஒலித்த குரல்களுக்கு நன்றி: கடத்தப்பட்ட ஊடகர் உருக்கம்!
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடத்தப்பட்ட அமெரிக்க சுயாதீன ஊடகவியலாளர் Shelly Kittleson , தற்போது விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக நன்றி தெரிவித்துள்ளார்.
ஈரான் ஆதரவு பெற்ற மிலிஷியா குழுவினராலேயே இவர் கடத்தி செல்லப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தன்னை மீட்பதற்காகப் பாடுபட்ட அரச அதிகாரிகள் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடக அமைப்புகள் மற்றும் நண்பர்களின் தீவிர முயற்சியால் தனது விடுதலை சாத்தியமானதாக Shelly Kittleson குறிப்பிட்டுள்ளார்.





