யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட 8 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் இன்று புதன்கிழமை நேரில் பார்வையிட்டனர். இலங்கை செய்தி

ஐரோப்பிய தூதுக்குழு செம்மணியில் ஒரு மணிநேரம் அவதானிப்பு

  • July 22, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட 8 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் இன்று புதன்கிழமை நேரில் பார்வையிட்டனர். செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் நேரில் பார்வையிட அனுமதி கோரி, கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்தரணி ஊடாக […]

தெற்கு லெபனானில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தால் மட்டுமே ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்களைக் களைவது சாத்தியமாகும் என்று லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் (Joseph Aoun) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்டுங்கள்: அமெரிக்க மண்ணில் லெபனான் ஜனாதிபதி முழக்கம்

  • July 22, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தால் மட்டுமே ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்களைக் களைவது சாத்தியமாகும் என்று லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் (Joseph Aoun) தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மற்றும் அவரது தூதுக்குழுவினரைக் கெளரவிக்கும் வகையில், அமெரிக்காவிற்கான லெபனான் தூதர் நாதா ஹமாதே மொஅவாத் (Nada Hamadeh Moawad) வாஷிங்டன் டி.சி.யில் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவ்ன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமெரிக்க நாடாளுமன்ற (காங்கிரஸ்) உறுப்பினர்கள் […]

ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரானது. நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அகற்றப்பட வேண்டும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி தமிழ்நாடு

டெல்லியில் எதிரணிகள் போராட்டம்: தமிழக முதல்வர் ஆதரவு

  • July 22, 2026
  • 0 Comments

ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரானது. நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அகற்றப்பட வேண்டும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்துக்கு […]

நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது வெள்ளிக்கிழமை விவாதம்

  • July 22, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. முற்பகல் 11.30 மணி முதல் 5.30 மணிவரை விவாதம் நடத்தப்பட்டு, அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே நீதி அமைச்சருக்கு எதிரான எதிரணிகளால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. சபாநாயகரிடம் குறித்த பிரேரணை நேற்று கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 38 ஆவது நாளான இன்று 08 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணி விவகாரம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கமைய நடவடிக்கை: அரசு உறுதி

  • July 22, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு அமையவே அரசாங்கம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது, செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதிக்கு ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு விஜயம் செய்வது குறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கூறியவை வருமாறு: “செம்மணி விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்டு […]

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான 'ஆசியான்' (ASEAN) நடத்திய பிராந்தியக் கூட்டத்தின் இடையே, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் புதன்கிழமை சந்தித்துப் பேசவுள்ளனர். உலகம் செய்தி

அமெரிக்க, சீன வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

  • July 22, 2026
  • 0 Comments

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ (ASEAN) நடத்திய பிராந்தியக் கூட்டத்தின் இடையே, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் புதன்கிழமை சந்தித்துப் பேசவுள்ளனர். இக்கூட்டத்தில் மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்துள்ள மோதல்கள் மற்றும் தென்சீனக் கடலில் நிலவும் பதற்றம் குறித்து மூத்த ராஜதந்திரிகள் கவலை தெரிவித்தனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளபடி, செப்டம்பர் மாத இறுதியில் இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெறவுள்ள உச்சிமாநாடு குறித்து […]

"பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் அச்சட்டம் நீக்கப்படும். அதேபோல, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் (தமிழ் அரசியல் கைதிகள்) பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாட முடியும்" என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இலங்கை செய்தி

“தமிழ் அரசியல் கைதிகள் பிணைகோரி நீதிமன்றத்தை நாடலாம்” – நீதி அமைச்சர்

  • July 22, 2026
  • 0 Comments

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் அச்சட்டம் நீக்கப்படும். அதேபோல, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் (தமிழ் அரசியல் கைதிகள்) பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாட முடியும்” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் காலப்பகுதி தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன், […]

சிட்னியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மூச்சுப் பரிசோதனையின் போது (Random Breath Test), மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் டேவிட் வார்னர், குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஆஸ்திரேலியா செய்தி விளையாட்டு

மதுபோதையில் வாகனம் ஓட்டிய டேவிட் வார்னர்

  • July 22, 2026
  • 0 Comments

சிட்னியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மூச்சுப் பரிசோதனையின் போது (Random Breath Test), மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் டேவிட் வார்னர், குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மே மாதம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின்போதே, வார்னரின் வழக்கறிஞர் பாபி ஹில், வார்னர் தனது தவறை ஏற்றுக்கொண்டதாகவும், தனது செயல் பொறுப்பற்றது என்பதை அவர் உணர்ந்துள்ளதாகவும் கூறியிருந்ததால், அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஈஸ்டர் ஞாயிறன்று (Easter Sunday) நண்பரின் வீட்டில் […]

ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு , உக்ரைன் இராணுவத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மாற்றமாக, ஜெனரல் மிகாய்லோ டிராபதி (43) உக்ரைனின் புதிய தலைமைத் தளபதியாக ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி நியமித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைன் ராணுவத்தில் அதிரடி மாற்றம்: புதிய தலைமைத் தளபதி நியமனம்

  • July 22, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு , உக்ரைன் இராணுவத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மாற்றமாக, ஜெனரல் மிகாய்லோ டிராபதி (43) உக்ரைனின் புதிய தலைமைத் தளபதியாக ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி நியமித்துள்ளார். முந்தைய தலைமைத் தளபதியான 60 வயதான ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி என்பவருக்குப் பதிலாக ஜெனரல் டிராபதி நியமிக்கப்பட்டுள்ளார். மரியாதைக்குரிய மற்றும் அனுபவமிக்க தளபதியான இவர், 2024 முதல் 2025 வரை உக்ரைனின் தரைப்படைப் பிரிவை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல பாதுகாப்பு அமைச்சரான மிகாய்லோ பெடோரோவ் திடீரென […]

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு இயற்றப்படுமா? அநுர அரசு கூறுவது என்ன?

  • July 22, 2026
  • 0 Comments

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதா இல்லையா என்பது குறித்தும், எந்தச் சட்டங்களைத் திருத்த வேண்டும் என்பது குறித்தும் அரசாங்கமாக நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. சரியான நேரத்தில் அதை நாங்கள் வெளிப்படுத்துவோம். நாங்கள் என்ன செய்தாலும், அது மக்களின் […]