4.2 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு: FIFA ஆலோசகர் ராஜினாமா
சர்வதேச கால்பந்து சம்மேளனமான பீபாவின் (FIFA) உலகக்கோப்பை மற்றும் பிற முக்கிய தொடர்களின் பங்குகளை விற்பனை செய்ய அந்த அமைப்பு முன்வைத்துள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீபா தலைவர் ஜிஅன்னி இன்ஃபான்டினோவின் மூத்த ஆலோசகர் கார்லோஸ் கார்டிரோ (Carlos Cordeiro) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘FIFA பார்வர்ட் என்டர்பிரைஸ்’ (FFE) என்ற திட்டத்தின் கீழ் தனிநபர் முதலீடுகளை ஈர்ப்பதற்கான யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உடனடி அமலுக்கு வரும் வகையில் தனது ராஜினாமாவை […]













