சியூட்டாவில் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு – அவசரமாகக் கூடும் அதிகாரிகள்
சியூட்டாவில் Ceuta இயல்பு நிலையை மீட்டெடுக்க அதிகாரிகள் போராடி வருகின்ற நிலையில், ஸ்பானியப் பிரதமர் பெட்ரோ சான்செஸ் Pedro Sánchez தேசியப் பாதுகாப்புக் குழுவின் ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
நிலைமையை மதிப்பிடுவதற்கும் அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சியூட்டா மொரோக்கோவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் காரணமாக கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் முன்னதாக வந்திறங்கியவர்களின் எண்ணிக்கையை சுமார் 72,000 எனக் குறிப்பிட்டிருந்தது. அவர்களில் சுமார் 70,000 பேர் மொராக்கோவிற்குத் திரும்பிச் சென்றுவிட்டதாக பின்னர் கூறியது.
இருப்பினும், சியூட்டாவில் உள்ள ஸ்பெயின் அரசாங்கத்தின் பிரதிநிதியான மிகுவல் ஏஞ்சல் பெரெஸ் ட்ரியானோ, தராஜல் எல்லை வழியாக 80,000-க்கும் மேற்பட்டோர் நுழைந்துள்ளதாக இன்று அறிவித்தார்.
நெருக்கடி தொடங்கி 25 நாட்களுக்குப் பிறகும், நகரம் இயல்பு நிலைக்குத் திரும்புவதிலிருந்து “மிகவும் தொலைவில்” இருப்பதாக அவர் கூறினார்.
மேலும் அங்கு மனிதாபிமான நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.




