பொலிஸ்மா அதிபருக்கு எச்சரிக்கை விடுத்த மஹிந்த அணி: விசாரணை வேட்டை ஆரம்பம்
பொலிஸ்மா அதிபருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு கட்சி) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். முன்னதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்டிருந்த சாகர காரியவசம், “அரசாங்கத்திற்குச் சேவை செய்வதை விடுத்து, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவையாற்றுமாறு தற்போதைய பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். இலங்கையின் 37 ஆவது […]













