மற்றுமொரு சிறைச்சாலையிலும் மோதல் வெடிப்பு இலங்கை செய்தி

மற்றுமொரு சிறைச்சாலையிலும் மோதல் வெடிப்பு

  • August 7, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறைச்சாலையிலும் இன்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கைதிகள் சிலர் கூரைமீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, மகசின், குருவிட்ட சிறைச்சாலைகளிலும் அமைதியின்மை ஏற்பட்டது. குருவிட்ட சிறைச்சாலை வன்முறையில் இருவர் உயிரிழந்துள்ளனர், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தபட்சம் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர். உலகம் செய்தி

தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி; 15 பேர் காயம்

  • August 7, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தபட்சம் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர். பேங்காக்கின் வடமேற்குப் பகுதியில் உள்ள நொந்தபுரி (Nonthaburi) மாகாணத்தின் பாங் குருவாய் (Bang Kruai) மாவட்டத்தில் அமைந்துள்ள ‘டெப்சிரின் நொந்தபுரி’ பாடசாலையில் (Debsirin Nonthaburi School) வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலியானோர் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவசர உதவிப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியதாக Thai Enquirer செய்தி வெளியிட்டுள்ளது. காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு […]

பிரதமர் நரேந்​திர மோடியை இஸ்​ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்​கிய ஆலோ​சனை மேற்​கொண்​டார். இந்தியா செய்தி

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் அவசர ஆலோசனை

  • August 7, 2026
  • 0 Comments

பிரதமர் நரேந்​திர மோடியை இஸ்​ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்​கிய ஆலோ​சனை மேற்​கொண்​டார். இந்த உரை​யாடலின் போது, இந்​தியா – இஸ்​ரேல் இடையி​லான முக்​கிய கூட்​டாண்​மையை ஆய்வு செய்த இரு தலை​வர்​களும், பல்​வேறு துறை​களில் இருதரப்பு உறவை மேலும் வலுப்​படுத்த உறு​தி​யேற்​றனர். மேற்கு ஆசிய போர் சூழல் குறித்​துப் பேசிய இரு தலை​வர்​களும், தொடர்ந்து தொடர்​பில் இருப்​பது என முடிவு செய்​தனர். கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்​ரேலும் இணைந்து ஈரான் மீது […]

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற பகைமை நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே பயணிப்பதைத் தடுக்கும் வகையிலான சட்டமூலம் குறித்து ஈரானிய நாடாளுமன்றக் குழு பரீசிலித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹேர்முஸ் வழியே பயணிக்க அமெரிக்க, இஸ்ரேல் கப்பல்களுக்கு தடை: ஈரான் வியூகம்

  • August 7, 2026
  • 0 Comments

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற பகைமை நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே பயணிப்பதைத் தடுக்கும் வகையிலான சட்டமூலம் குறித்து ஈரானிய நாடாளுமன்றக் குழு பரீசிலித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை மேற்கோள் காட்டி ஈரான் அரச ஊடகமொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு சட்டமூலத்தின் பிரகாரம், விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை மீறும் கப்பல்களின் சரக்கு மதிப்பில் 20 சதவீதம் வரை அபராதமாக வசூலிக்கப்படும். இந்தச் சட்டமூலம் இன்னும் நிபுணர்களின் ஆய்வில் […]

இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகதெரியவருகின்றது. இலங்கை செய்தி

குருவிட்ட சிறைச்சாலையிலும் பதற்றம்: கண்ணீர்புகை பிரயோகம் – படைகள் குவிப்பு

  • August 7, 2026
  • 0 Comments

இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகதெரியவருகின்றது. நேற்றிரவு குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. இன்று காலை மீண்டும் சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது, சிறைச்சாலையின் மருத்துவமனை கைதிகளால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக காவல்துறையினரால் கண்ணீர்புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் உடனடியாக […]

இலங்கையில் தொடரும் சிறைச்சாலை மோதல்: ஆறு கைதிகள் காயம் இலங்கை செய்தி

இலங்கையில் தொடரும் சிறைச்சாலை மோதல்: ஆறு கைதிகள் காயம்

  • August 7, 2026
  • 0 Comments

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்றிரவு 10.40 மணியளவில் சிறைச்சாலையில் இருந்த கைதிகள் குழப்பங்களில் ஈடுபட்டதை அடுத்து மேலதிக காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். சம்பவத்திற்குக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைச் சுவருக்கு மேலாக வீசப்பட்ட போதைப்பொருள் பொதி ஒன்றை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியதை அடுத்து, […]

இஸ்ரேலிய அரசாங்கம் அமைதியை விரும்புவதாகத் தெரியவில்லை - என்று துருக்கி வெளிவிவகார அமைச்சர் Hakan Fidan பகிரங்கமாக விமர்சித்துள்ளார். உலகம் செய்தி

அமைதியை விரும்பாத இஸ்ரேல்: துருக்கி கடும் விசனம்

  • August 6, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய அரசாங்கம் அமைதியை விரும்புவதாகத் தெரியவில்லை – என்று துருக்கி வெளிவிவகார அமைச்சர் Hakan Fidan பகிரங்கமாக விமர்சித்துள்ளார். சிரிய வெளிவிவகார அமைச்சருடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தொடர் தாக்குதல்களை அவர் கண்டித்துள்ளார். குறிப்பாக, அமைதி உடன்படிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், காசா மற்றும் மேற்குக் கரையில் முன்னெடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் அமைதியற்ற போக்கையே வெளிப்படுத்துவதாகவும் துருக்கி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலையும், […]

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நிலைமைகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரானிய அரசாங்கம் தனது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது. உலகம் செய்தி மத்திய கிழக்கு

ஈரானில் இறுக்கமடையும் பாதுகாப்புக் கட்டுப்பாடு: 56 பேருக்கு மரண தண்டனை

  • August 6, 2026
  • 0 Comments

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நிலைமைகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரானிய அரசாங்கம் தனது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது. இதற்கமைய தலைநகர் தெஹ்ரானில் பாதுகாப்புப் படையினரும் மதப் பொலிஸாரும் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கட்டாய ஹிஜாப் ஆடைக்கட்டுப்பாடு, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கான தடைகள் மற்றும் அரசுக்கு எதிர்ப்பாகக் கருதப்படும் நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக “உள்நாட்டு ஒற்றுமையை” பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஈரான் அதிகாரிகள் […]

யாழ்ப்பாணம், செம்மணி புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 அதிகரித்துள்ளது. இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: 500ஐ நெருங்கியது எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை

  • August 6, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 அதிகரித்துள்ளது. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 45ஆவது நாள் அகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்ட போது, புதிதாக 08 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 05 மனித எலும்புக்கூடுகள் இன்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. இதையடுத்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 494 […]

இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கைக் கடற்பரப்புக்குள் இழுத்து வரப்பட்ட படகில் இருந்த 11 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

இலங்கைக் கடற்பரப்பில் தவித்த 11 இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

  • August 6, 2026
  • 0 Comments

இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கைக் கடற்பரப்புக்குள் இழுத்து வரப்பட்ட படகில் இருந்த 11 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற குறித்த படகு, இயந்திரக் கோளாறு காரணமாக நெடுந்தீவு குயின் ரவஸ் பகுதிக்கு அருகில் உள்ள கலப் பகுதிக்குள் அகப்பட்டுள்ளது. இதனால் நடுக்கடலில் தவித்த மீனவர்கள் உதவி கோரியுள்ளனர். எனினும், கடல் வற்றுப்புக் காணப்பட்டதனால் கடற்படையினரின் படகுகளோ அல்லது ஏனைய மீன்பிடிப் படகுகளோ குறித்த பகுதிக்குச் செல்ல […]