இலங்கை செய்தி

ஜெனிவா சமர் இன்று ஆரம்பம்!

  • February 23, 2026
  • 0 Comments

இராஜதந்திர சமரெனக் கருதப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் UN Human Rights Council 61 ஆவது கூட்டத்தொடர் இன்று (23) ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இம் மாநாட்டில் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மதிப்பீடு செய்யப்படவுள்ளது. குறிப்பாக இலங்கை மனித உரிமை நிலைவரம் மற்றும் பொறுப்புகூறல் பற்றியும் ஜெனிவா மாநாட்டில் அவதானம் செலுத்தப்படவுள்ளது. ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி தலைமையிலான குழு மாநாட்டில் பங்கேற்கவுள்ளது.

இந்தியா செய்தி

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் வேண்டாம்: காங்கிரஸ் வலியுறுத்து!

  • February 21, 2026
  • 0 Comments

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை பா.ஜ.க. அரசு நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே, காங்கிரஸ் இவ்வாறு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் இந்திய-அமெரிக்க கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களைப் பயன்படுத்தி, […]

இலங்கை செய்தி

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகருக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

  • February 21, 2026
  • 0 Comments

“இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் எங்கே? அநுர அரசே இதற்குப் பதில் சொல்!” இவ்வாறு வலியுறுத்தி யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில் இன்று சனிக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடமராட்சி – கரவெட்டியைச் சேர்ந்த ஆசிரியரும் ஊடகவியலாளருமான சு.இராமச்சந்திரன், கடந்த 15.02.2007 அன்று பணி முடிந்து வீடு திரும்பிய போது, துன்னாலை கலிகைச் சந்தி இராணுவ முகாமில் வைத்து இராணுவத்தினராலும் ஈ.பி.டி.பியினராலும் கைது செய்யப்பட்டுக் காணாமலாக்கப்பட்டார். இச்சம்பவம் இடம்பெற்று 19 […]

உலகம்

உறுதியானது ட்ரம்பின் சீன விஜயம்: திகதியும் நிர்ணயம்!

  • February 21, 2026
  • 0 Comments

அமெரிக்க US ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Donald Trump சீன China விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான திகதி விபரமும் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய மார்ச் 31 ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப், பீஜிங் Beijing செல்வார் எனவும், ஏப்ரல் 02 ஆம் திகதிவரை அங்கு தங்கி இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் கடந்த 4 ஆம் திகதி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் Xi Jinping தொலைபேசியில் உரையாடினார். இதன்போது சீனா வருமாறு ட்ரம்ப்புக்கு அழைப்பு […]

பொழுதுபோக்கு

தனுசுக்கு ஐஸ் வைக்கும் நடிகை!

  • February 21, 2026
  • 0 Comments

தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாகூர் ஆகியோர் தொடர்பில் கிசு கிசுக்கள் காட்டுத் தீ போல் பரவிவரும் நிலையில், அதற்கு எண்ணெய் ஊற்றுவதுபோல தகவல் வெளிவந்துள்ளது. “தனுஷ் சார் ஒரு கலைக்கூடம்.” என்று நடிகை மிருணாள் தாகூர் புகழாரம் சூட்டியிருக்கிறார். தனுஷ், மிருணாள் தாகூர் இருவரும் காதலிக்கின்றனர், விரைவில் கரம்பிடிக்கவுள்ளனர் என்று இணையத்தில் கடந்த சில மாதங்களாகே தகவல்கள் பகிரப்பட்டுவந்தன. இதற்கு மிருணாள் தாகூர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், அவர் இந்த விவகாரம் தொடர்பில் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தொகுதி பங்கீடு: பேச்சு நடத்த விசேட குழு அமைத்தது தி.மு.க.!

  • February 21, 2026
  • 0 Comments

தேர்தல் கூட்டணி அமைக்கும் நகர்வை வெற்றிகரமாக நகர்த்தி வரும் தி.மு.க., அடுத்தக்கட்டமாக தொகுதி பங்கீடு தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்த எழுவர் அடங்கிய குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கான குழுவின் தலைமைப் பதவி டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துபை; பொதுச்செயலாளர் திருச்சி சிவா, ஆ.இராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ. வேலு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏனைய குழு உறுப்பினர்களாவர்.

இலங்கை செய்தி

இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இலங்கை, அமெரிக்கா ஆராய்வு!

  • February 21, 2026
  • 0 Comments

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை தளபதி அட்மிரல் Stephen T. “Web” Koehler, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சந்தித்து பேச்சு நடத்தினார். இச்சந்திப்பில், பகிரப்பட்ட பாதுகாப்புச் சவால்கள், கடல்சார் பாதுகாப்பு, அனர்த்த நிவாரண திறன்களை மேம்படுத்தல், ஒத்துழைப்பை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக கடல்சார் கள விழிப்புணர்வை (Maritime Domain Awareness) வலுப்படுத்துதல் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. பாதுகாப்பு பிரதி […]

அரசியல் இலங்கை செய்தி

டயஸ்போராக்களின் அழுத்தத்துக்கு அடிபணிவாரா நாமல்?

  • February 21, 2026
  • 0 Comments

“டயஸ்போராக்கள் அழுத்தம் பிரயோகிக்கின்றனர் என்பதற்காக சும்மா இருந்துவிடப்போவதில்லை. கட்டாயம் லண்டன் செல்லுமாறு நாமலிடம் கூறியுள்ளோம். பாதுகாப்பை கருத்திற்கொண்டு அவர் முடிவை எடுப்பார்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் யூனியனில், நாடாளுமன்ற உறுப்பிர் நாமல் ராஜபக்ச நிகழ்த்த விருந்த உரை, புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு நேற்று பதிலளித்த தஸ்ஸ குட்டியாராச்சி கூறியவை வருமாறு, “நாமல் […]

அரசியல் இலங்கை செய்தி

போரை காட்டிக்கொடுத்தாரா மஹிந்த?

  • February 21, 2026
  • 0 Comments

“மஹிந்த ராஜபக்ச போரை காட்டிக்கொடுத்துவிட்டார் என Sarath Fonseka பொன்சேகா கூறுவது அபத்தமானது. போரை முடிப்பதற்கு மஹிந்த ராஜபக்சவே சிறப்பான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கினார்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி Tissa Kuttiyarachchi தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ராஜபக்ச குடும்பம் தொடர்பில் பொன்சேகா கடும் வைராக்கியத்துடனேயே இருக்கின்றார். மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பொன்சேகா கதைப்பதில்லை. மாறாக ராஜபக்சக்கள் பற்றியே […]

விளையாட்டு

சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்!

  • February 21, 2026
  • 0 Comments

உலகக்கிண்ண தொடரில் இன்று (21) ஆரம்பமாகும் சூப்பர் 8 சுற்றில் முதலாவது போட்டியில் நியூசிலாந்து New Zealand மற்றும் பாகிஸ்தான் Pakistan ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இரு அணிகளும் சமபலம் படைத்த அணியென்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. தொடர்புடைய செய்தி……… சூப்பர் 8 சுற்று நாளை ஆரம்பம்: போட்டிகள் தொடர்பான முழு விபரம்…!