ஐரோப்பா

பயங்கரவாத குற்றச்சாட்டு – இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பிரித்தானியருக்கு பிணை

பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் காவலில் வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ள சீக்கிய உரிமை ஆர்வலர் ஜக்தார் சிங் ஜோஹலுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

டம்பார்டனைச் சேர்ந்த 39 வயதான இவர், தடைசெய்யப்பட்ட பிரிவினைவாதக் குழுவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் கடுமையாக மறுப்பதோடு, காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு ஒரு வழக்கில் விடுவிக்கப்பட்ட போதிலும்,  ஜோஹல் இன்னும் பல கூட்டாட்சி குற்றச்சாட்டுகளையும், மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகளையும் எதிர்கொண்டுள்ளார்.

இருப்பினும் மனித உரிமை அமைப்புகள்  இக்குற்றச்சாட்டுகளை   போலியானவை மற்றும் புனையப்பட்டவை என்று விவரித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து அவருக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த முடிவை டன்பார்ட்ஷயர் Dunbartonshire நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் மெக்கலிஸ்டர்  Douglas McAllister வரவேற்றுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்