ட்ரம்ப் – ஷி ஜின்பிங் சந்திப்பில் சந்தேகம் – தைவான் விவகாரத்தால் முட்டுக்கட்டை
அமெரிக்கா மற்றும் சீனா ஜனாதிபதிகள் இந்த மாதத்தின் இறுதியில் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா தைவானுக்கு ஆயுதங்களை வழங்கினால் இந்த சந்திப்பு இடம்பெறாத என விடயத்தை நன்கறிந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நவம்பர் மாத இடைக்கால நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, சில இராஜதந்திர சாதனைகளை வெளிக்காட்ட ட்ரம்ப் ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடனான உச்சிமாநாட்டை நடத்துவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார்.
இதற்கிடையில் இருநாட்டு உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் வகையில், தைவான் விவகாரம் முட்டுக்கட்டையாக அமையும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக மேமாத நடுப்பகுதியில், மே மாத நடுப்பகுதியில் பெய்ஜிங்கில் ஷி, ட்ரம்பைச் சந்தித்தபோது, இரு நாடுகளின் உறவுகளில் தைவான் “மிக முக்கியமான பிரச்சினை” என்று அமெரிக்க ஜனாதிபதியிடம் கூறினார். மேலும், இப்பிரச்சினை தவறாகக் கையாளப்பட்டால் ஒரு மோதல் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்தார்.
அப்போது, தைவானுக்கான ஆயுத விற்பனை, சீனாவுடனான தனது பேச்சுவார்த்தைகளில் “ஒரு மிகச் சிறந்த பேரம்பேசும் கருவியாக” இருக்கக்கூடும் என்று ட்ரம்ப் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கூறினார்.
இது, ஆசியாவில் உள்ள தனது நட்பு நாடுகளுக்கு வொஷிங்டன் அளித்துவரும் நீண்டகால பாதுகாப்பு உறுதிமொழிகள் குறித்து சந்தேகங்களை எழுப்பியது.
தைவான் ஜலசந்தியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சீனாவின் அதிகரித்த இராணுவ நடவடிக்கைகள், ஒரு சாத்தியமான படையெடுப்பு மற்றும் அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு பரந்த பிராந்திய மோதல் குறித்த அச்சங்களை ஏற்படுத்தியுள்ளன.





