கடந்த காலத்தில் நாட்டின் அதிகாரத்தில் இருந்துகொண்டு வளங்களைச் சூறையாடி, பொருளாதார வீழ்ச்சிக்கும் மக்களின் அவல நிலைக்கும் காரணமானவர்கள், இன்று புனிதர்களைப் போல வேடமிட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற முற்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

நாட்டை நாசமாக்கியவர்கள் இன்று புதிய வேடம்

  • August 24, 2026
  • 0 Comments

கடந்த காலத்தில் நாட்டின் அதிகாரத்தில் இருந்துகொண்டு வளங்களைச் சூறையாடி, பொருளாதார வீழ்ச்சிக்கும் மக்களின் அவல நிலைக்கும் காரணமானவர்கள், இன்று புனிதர்களைப் போல வேடமிட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற முற்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: “2029 ஆம் ஆண்டு ஜனாதிபதியாவதாகக் கூறிக்கொண்டு, நாமல் ராஜபக்ச இன்று கிராமம் கிராமமாகவும், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள் மற்றும் குளங்கள் […]

பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடரும் நோக்கில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் திங்கள்கிழமை தெஹ்ரானுக்கு விஜயம் செய்கிறார் என ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பாகே Esmaeil ‌Baghaei தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

அவசரமாக ஈரான் விரைகிறார் பாகிஸ்தான் ராணுவத் தளபதி

  • August 24, 2026
  • 0 Comments

பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடரும் நோக்கில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் திங்கள்கிழமை தெஹ்ரானுக்கு விஜயம் செய்கிறார் என ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பாகே Esmaeil ‌Baghaei தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் மத்தியஸ்தர் பாத்திரத்தை வகித்து வருகிறது. இந்த விஜயத்தின் போது, […]

"தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நிலைப்பாடு நிலவுவதாகக் கூறுவதை எதிரணியினர் நிரூபித்துக் காட்ட வேண்டும். அதை விடுத்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் வீட்டில் ஒன்றுகூடிச் சூழ்ச்சி செய்வது உண்மையான அரசியல் எதிர்ப்பு நடவடிக்கை அல்ல" என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இலங்கை செய்தி

NPPஐ வலுப்படுத்தும் திட்டம் ஆரம்பம்: 05 ஆம் திகதி முதல் நேரில் களமிறங்கும் அநுர

  • August 24, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நிலைப்பாடு நிலவுவதாகக் கூறுவதை எதிரணியினர் நிரூபித்துக் காட்ட வேண்டும். அதை விடுத்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் வீட்டில் ஒன்றுகூடிச் சூழ்ச்சி செய்வது உண்மையான அரசியல் எதிர்ப்பு நடவடிக்கை அல்ல” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். “கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராகத் திரண்ட மக்களை விடவும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவே மக்கள் உள்ளனர்; எனவே மீண்டுமொரு போராட்டத்தை நடத்த நேரிடும்” என எதிரணி தரப்பில் முன்வைக்கப்பட்டு வரும் […]

இவ்வாண்டின் தொடக்கத்தில் சிட்னியின் பிரபல கடற்கரையில் சுறா மீன் தாக்குதலுக்கு இலக்கான ஆஸ்திரேலியப் பெண் ஒருவர், தனக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சுறா தாக்குதலில் இருந்து மீண்ட பெண்ணின் உருக்கமான பதிவு

  • August 24, 2026
  • 0 Comments

இவ்வாண்டின் தொடக்கத்தில் சிட்னியின் பிரபல கடற்கரையில் சுறா மீன் தாக்குதலுக்கு இலக்கான ஆஸ்திரேலியப் பெண் ஒருவர், தனக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் குஜி (Coogee) கடற்கரையில் காலை வேளையில் நீந்திக் கொண்டிருந்த 35 வயதான லியா ஸ்டீவர்ட் (Leah Stewart) என்ற ஒரு குழந்தையின் தாய், சுறா மீனின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளானார். இதில் அவரது கைகள் மற்றும் கால்களில் பலத்த காயங்கள் […]

வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் இன்று (24.08.2026) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

வடக்கு மாகாணத்துக்கு புதிய ஆணையாளர் நியமனம்

  • August 24, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் இன்று (24.08.2026) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றிய திருமதி சுஜீவா சிவதாஸ் மத்திய அரசின் சேவைக்காக விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பதவிக்கான புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் […]

பிரித்தானிய பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக Andy Burnham, உக்ரைன் தலைநகர் கிவ் (Kyiv) நகருக்கு திங்கட்கிழமை விஜயம் மேற்கொள்கின்றார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானிய பிரதமர் Andy Burnham முதல் வெளிநாட்டு பயணமாக உக்ரைன் விஜயம்

  • August 24, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக Andy Burnham, உக்ரைன் தலைநகர்  கிவ் (Kyiv) நகருக்கு திங்கட்கிழமை விஜயம் மேற்கொள்கின்றார். உக்ரைனின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிகழ்வில் பங்கேற்கும் அவர், அந்நாட்டிற்கான பிரித்தானியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவுள்ளார். முன்னாள் பிரதமர் சர் கீர் ஸ்டார்மரின் காலத்தில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளால் உருவாக்கப்பட்ட “விருப்பமுள்ளவர்களின் கூட்டணி” (Coalition of the Willing) அமைப்பின் முதல் கூட்டத்திற்குப் பிரதமர் Andy Burnham தலைமை தாங்குவார். […]

யாழ்ப்பாணத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள 'சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்துக்கு' அனைவரதும் ஆதரவைக் கோரியுள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உதவிகளைத் துரிதப்படுத்துவதுடன் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை தீவிரம்

  • August 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ‘சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்துக்கு’ அனைவரதும் ஆதரவைக் கோரியுள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உதவிகளைத் துரிதப்படுத்துவதுடன் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வு குறித்தும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு ஆளுநர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. […]

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாட்டை நடைமுறைப்படுத்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பார் என “சண்டே டைம்ஸ்'' ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை செய்தி

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் அவசர இலங்கை விஜயத்தின் பின்னணி என்ன?

  • August 24, 2026
  • 0 Comments

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாட்டை நடைமுறைப்படுத்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பார் என “சண்டே டைம்ஸ்” ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள தனது முதல் பயணத்தின் போது, ​​ ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பை வகிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் […]

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81-ஆவது கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இலங்கை செய்தி

ஐ.நா. கூட்டத்தொடர் செப்டம்பர் 22 ஆரம்பம்: இலங்கை சார்பில் விஜித ஹேரத் பங்கேற்பு

  • August 23, 2026
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81-ஆவது கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஐ.நா. பொதுச்சபையின் 81-ஆவது அமர்வின் உயர்மட்ட விவாதம் செப்டம்பர் 22 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. இதில் பல உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். எனினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதில் கலந்துகொள்ள மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கையின் சார்பில் […]

ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்கான புதிய அமெரிக்க முயற்சிகளில் இணைய வேண்டாம் என அதன் அண்டை நாடுகளுக்கு ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவரான மொஹ்சன் ரெசாய் கடுமையாக Mohsen Rezaei எச்சரித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

‘பொருளாதார இலக்குகளைத் தாக்குவோம்’ – அண்டை நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

  • August 23, 2026
  • 0 Comments

ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்கான புதிய அமெரிக்க முயற்சிகளில் இணைய வேண்டாம் என அதன் அண்டை நாடுகளுக்கு ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவரான மொஹ்சன் ரெசாய் கடுமையாக Mohsen Rezaei எச்சரித்துள்ளார். அத்துடன், ஹோர்முஸ் நீரிணையை தனது “புதிய நிலப்பரப்பு” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறிவரும் நிலையில், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க வணிக நலன்களுக்கு எதிராகவும் ஈரான் அச்சுறுத்தல் விடுத்துள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தீவிரவாதப் போக்கு […]