உலகம் செய்தி

போர் பதற்றத்தால் மீண்டும் எகிறியது எண்ணெய் விலை

போர் பதற்றத்தால் மீண்டும் எகிறியது எண்ணெய் விலை

ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த பரபரப்பான அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலையானது திடீரென ஆறு சதவீதம் வரை உயர்ந்து, ஒரு பேரல் 78 டாலராக அதிகரித்துள்ளது.

முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர்வதால், உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்துள்ளதுடன், அரசுப் பத்திரங்களின் வருவாயும் (Government Bond Yields) அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கில் மீண்டும் போர்ச் சூழல் வெடித்துள்ளதால், உலகளவில் மீண்டும் பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருவதே இந்தத் திடீர் பொருளாதார மாற்றங்களுக்குக் காரணம் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி