இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெருமளவிலான பிரதிநிதிகளுடன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியா உலகம் செய்தி

7 வருடங்களுக்கு பிறகு இந்தியா வருகிறார் சீன ஜனாதிபதி

  • August 24, 2026
  • 0 Comments

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெருமளவிலான பிரதிநிதிகளுடன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு அவர் வருகை தந்தால், அது கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் விஜயமாக அமைவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள சுமுகமான மாற்றத்தின் ஒரு முக்கிய அறிகுறியாகவும் பார்க்கப்படும். எதிர்வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இந்தியா பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்துகிறது. 2020 ஆம் […]

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல்களை முறியடிக்க, தமது சொந்த வான் பாதுகாப்பு கையிருப்புகளைப் பயன்படுத்தியாவது சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நேச நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைனை பாதுகாக்க அனைத்தையும் செய்வோம்: பிரித்தானிய பிரதமர் தெரிவிப்பு

  • August 24, 2026
  • 0 Comments

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல்களை முறியடிக்க, தமது சொந்த வான் பாதுகாப்பு கையிருப்புகளைப் பயன்படுத்தியாவது சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நேச நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளார். ‘விருப்பமுடையோரின் கூட்டமைப்பு’ (Coalition of the Willing) மாநாட்டை இணை-தலைமேற்று நடத்திய தனது முதலாவது கூட்டத்தின் தொடக்க உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர், “உக்ரைன் மக்களுக்கு எதிராக பலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பயங்கரவாதப் பிரசாரத்தை […]

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது. இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: செப்.22 இல் வழக்கு தீர்ப்பு

  • August 24, 2026
  • 0 Comments

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது. மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வினால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையிலேயே இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் – […]

2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் முக்கிய பரீட்சைகளுக்குரிய திகதிகள் அறிவிப்பு

  • August 24, 2026
  • 0 Comments

2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை 2027 ஓகஸ்ட் 01ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2027 ஓகஸ்ட் 03 முதல் 2027 ஓகஸ்ட் 28 வரை நடைபெறும். பொதுத் தகவல் தொழில்நுட்பப் (GIT) பரீட்சை 2027 ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை 2027 டிசம்பர் […]

கொழும்பு கோட்டை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி: திட்டம் குறித்து ஆராய்வு இலங்கை செய்தி

கொழும்பு கோட்டை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி: திட்டம் குறித்து ஆராய்வு

  • August 24, 2026
  • 0 Comments

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் இந்நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் ஆகியவை தொடர்பாக, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கியின் முகாமையாளர் Gevorg Sargsyan உட்பட தூதுக்குழுவினருக்கும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கொழும்பு கோட்டையின் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன், சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் […]

உணவகங்களின் சுகாதாரமின்மை மற்றும் பாதுகாப்பற்ற உணவுகளுக்கு எதிராக மகாராஷ்டிர மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையாளர் துகாராம் முண்டே (Tukaram Mundhe) மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. இந்தியா செய்தி

உலகளவில் வைரலான உணவுப் பாதுகாப்பு ஆணையாளரின் அதிரடி வேட்டை

  • August 24, 2026
  • 0 Comments

உணவகங்களின் சுகாதாரமின்மை மற்றும் பாதுகாப்பற்ற உணவுகளுக்கு எதிராக மகாராஷ்டிர மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையாளர் துகாராம் முண்டே (Tukaram Mundhe) மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. மகாராஷ்டிராவின் உணவுப் பாதுகாப்புத் தலைவராக கடந்த மே மாதம் பொறுப்பேற்றதில் இருந்து, இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட சோதனைகளை அவர் நடத்தியுள்ளார். இதன் அடிப்படையில் டொமினோஸ் (Domino’s), பிட்சா ஹட் (Pizza Hut) மற்றும் மெக்டொனால்ட்ஸ் (McDonald’s) போன்ற சர்வதேச உணவகக் கிளைகள், புகழ்பெற்ற […]

யாழ்ப்பாணம், காரைநகர் - வேரப்பிட்டி கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது. இலங்கை செய்தி

யாழ். காரைநகரில் ஆணின் சடலம் மீட்பு

  • August 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்குச் சென்றவர்கள் அங்கு சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். மீட்கப்பட்ட சடலம் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் தொடர்பில் காரைநகர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் 8.7 கோடி இளைஞர்கள் வேலை, கல்வியின்றித் தவிப்பு இந்தியா செய்தி

இந்தியாவில் 8.7 கோடி இளைஞர்கள் வேலை, கல்வியின்றித் தவிப்பு

  • August 24, 2026
  • 0 Comments

இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு, முறையான கல்வி அல்லது தொழிற்பயிற்சி எதுவும் இன்றித் தவித்து வருவதாக NIT ஆயோக் (NITI Aayog) வெளியிட்டுள்ள அண்மைய ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. இந்தியாவின் தேசிய மாதிரி சர்வே (NSS) தரவுகளின் அடிப்படையில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு, தொழிற்பயிற்சிக் கட்டணப் சுமை ஏற்கனவே கல்விக்காகப் பெருந்தொகையைச் செலவிட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து இளைஞர்கள், தங்களின் தொழில் […]

இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை குறித்த 25 ஆவது சுற்றுச் சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இரு நாள் அரசுமுறைப் பயணமாகத் திங்கள்கிழமை பிற்பகல் பெய்ஜிங் சென்றடைந்தார். இந்தியா செய்தி

இந்தியா – சீனா எல்லைப் பேச்சு : பீஜிங் சென்றடைந்தார் அஜித் தோவல்!

  • August 24, 2026
  • 0 Comments

இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை குறித்த 25 ஆவது சுற்றுச் சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இரு நாள் அரசுமுறைப் பயணமாகத் திங்கள்கிழமை பிற்பகல் பெய்ஜிங் சென்றடைந்தார். சீன வெளியுறவு அமைச்சரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் குழு உறுப்பினருமான வாங் யீயின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள எல்லைப் பிரச்சினைக்கான 25ஆவது சுற்றுச் சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில், […]

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,515 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 2,642 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்கா உலகம் செய்தி

கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் எபோலா பரவல்: ஆப்பிரிக்காவில் தொடரும் கொடூர மரணங்கள்

  • August 24, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,515 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 2,642 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இதுரி (Ituri) மற்றும் வடக்கு கிவு (North Kivu) மாகாணங்களில் புதிதாக 51 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காங்கோ நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான இந்த எபோலா பரவலைக் கட்டுப்படுத்த சர்வதேச சமூகத்தின் உதவியைக் கோரி திருத்தந்தை லியோ (Pope Leo) வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த […]