கனடா மீதான அமெரிக்காவின் புதிய வரியானது , எம்மை திட்டமிட்ட அடிப்படையில் பிரித்து காயப்படுத்துவதற்கான ஒரு "தவறான கணக்கீடு” என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

திட்டமிட்டு காயப்படுத்தும் செயல்: வரிப்போர் குறித்து கனடா பிரதமர் அதிருப்தி

  • August 23, 2026
  • 0 Comments

கனடா மீதான அமெரிக்காவின் புதிய வரியானது , எம்மை திட்டமிட்ட அடிப்படையில் பிரித்து காயப்படுத்துவதற்கான ஒரு “தவறான கணக்கீடு” என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். சனிக்கிழமை காலை கனடிய மக்களுக்கு ஆற்றிய உரையில், “அவர்கள் மிக அதிகமாகக் கேட்டார்கள்; ஆனால் மிகக் குறைவாகவே வழங்கினார்கள்” என்று கனடா பிரதமர் கார்னி குறிப்பிட்டார். மேலும், அமெரிக்காவின் கடுமையான புதிய வரிகளைத் தொடர்ந்து, நாடு தற்போது ஒரு வர்த்தக “போரில்” ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். செப்டம்பர் 8 […]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி, வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் குரல் அமைப்பினரால் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு: பிரதமரிடம் மகஜர் கையளிப்பு

  • August 23, 2026
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி, வடக்கு – கிழக்கு காணி இழந்த மக்கள் குரல் அமைப்பினரால் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த பிரதமரை, நிகழ்வு நிறைவடைந்த பின்னர் வடக்கு – கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடினர். […]

பயங்கரவாதி ஹபிஸ் சயீதுக்கு அழைப்பாணை: பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியா முடிவு இந்தியா செய்தி

பயங்கரவாதி ஹபிஸ் சயீதுக்கு அழைப்பாணை: பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியா முடிவு

  • August 22, 2026
  • 0 Comments

2025-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்க தலைவர் ஹபிஸ் சயீதுக்கு Hafiz Saeed நீதிமன்ற அழைப்பாணையை (Summons) ராஜதந்திர வழிகள் மூலம் இஸ்லாமாபாத்திற்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றம்சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு கருத்தை முன்வைக்க போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டது என்பதைச் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்ய இந்த நடவடிக்கை மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. அடுத்த கட்டமாக […]

"எதிர்க்கட்சிகளை ஒடுக்கி, ஒற்றைக் கட்சி ஆட்சி முறையின் கீழ் சர்வாதிகாரத்தை நோக்கி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிக்க முயல்கிறதா?" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

சர்வாதிகாரத்தை நோக்கி பயணிக்கிறதா அநுர அரசு? எதிரணி கேள்வி

  • August 22, 2026
  • 0 Comments

“எதிர்க்கட்சிகளை ஒடுக்கி, ஒற்றைக் கட்சி ஆட்சி முறையின் கீழ் சர்வாதிகாரத்தை நோக்கி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிக்க முயல்கிறதா?” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்: “அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு மகா சங்கத்தினர், சட்டத்தரணிகள் மற்றும் சர்வதேச சமூகத்தினர் எனப் பல தரப்பினரும் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தாங்கள் வழங்கிய […]

பல பத்தாண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள், தாங்களாகவே முன்வந்து தாயகம் திரும்புவதை விரைவுபடுத்தும் வகையில் குடியேற்ற நடைமுறைகளை எளிதாக்க இலங்கை அரசு எடுத்துள்ள முடிவை ஐ. நா. சபை வரவேற்றுள்ளது. இந்தியா செய்தி தமிழ்நாடு

இந்தியாவிலிருந்து இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை: ஐ.நா வரவேற்பு

  • August 22, 2026
  • 0 Comments

பல பத்தாண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள், தாங்களாகவே முன்வந்து தாயகம் திரும்புவதை விரைவுபடுத்தும் வகையில் குடியேற்ற நடைமுறைகளை எளிதாக்க இலங்கை அரசு எடுத்துள்ள முடிவை ஐ. நா. சபை வரவேற்றுள்ளது. இது தொடர்பாக இலங்கைக்கான ஐ.நா பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிரான்ச் தனது எக்ஸ் (X) தளத்தில், “பாதுகாப்பான மற்றும் கண்ணியமான முறையில் தாயகம் திரும்புவதை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாக இலங்கை அமைச்சரவையின் இந்த முடிவை வரவேற்கிறேன். இவர்கள் தாயகம் திரும்புவதற்கும் மறுவாழ்வு […]

தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரப் பதற்றங்கள் நாடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் புதிய சவால்களை உருவாக்கி வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா செய்தி

” சீனாவுடன் இந்தியாவின் வர்த்தக உறவு தொடர வேண்டும்”

  • August 22, 2026
  • 0 Comments

தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரப் பதற்றங்கள் நாடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் புதிய சவால்களை உருவாக்கி வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்தியா தனது சொந்த தொழில் துறை மற்றும் பொருளாதாரத் திறன்களை வலுப்படுத்தும் அதே வேளையில், உலகின் முக்கிய பொருளாதார நாடுகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பொருளாதார மாநாட்டில் சனிக்கிழமை உரையாற்றிய ஜெய்சங்கர், உருவெடுத்து வரும் புதிய உலகளாவிய சூழலானது, நாடுகள் தங்கள் […]

உக்ரைன் ராணுவத்தில் இணைந்து, அந்நாட்டு ராணுவத்தின் இரகசியத் தகவல்களை ரஷ்ய உளவு முகவர்களுக்கு வழங்க முயன்றதாகக் கூறப்படும் நபரை ஆஸ்திரேலியக் கூட்டாட்சி காவல்துறை (AFP) கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ரஷ்யாவுக்காக உக்ரைன் ராணுவத்தில் இணைந்த ஆஸ்திரேலியர் கைது: பின்னணி என்ன?

  • August 22, 2026
  • 0 Comments

உக்ரைன் ராணுவத்தில் இணைந்து, அந்நாட்டு ராணுவத்தின் இரகசியத் தகவல்களை ரஷ்ய உளவு முகவர்களுக்கு வழங்க முயன்றதாகக் கூறப்படும் நபரை ஆஸ்திரேலியக் கூட்டாட்சி காவல்துறை (AFP) கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளது. ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியக் குடியுரிமை கொண்ட 27 வயதான விளாடிமிர் டெஸ்லோவ் (Vladimir Teslov) என்பவர் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது ‘வெளிநாட்டு தலையீட்டு முயற்சி’ (Attempted foreign interference) குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டிற்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். காவல்துறையின் குற்றச்சாட்டுகள் […]

உலக பாக்சிங் சாம்பியன் சுட்டுக்கொலை: தென்னாபிரிக்காவில் பயங்கரம் உலகம் செய்தி

உலக பாக்சிங் சாம்பியன் சுட்டுக்கொலை: தென்னாபிரிக்காவில் பயங்கரம்

  • August 22, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே, முன்னாள் உலக பாக்சிங் சாம்பியன் சொலானி “லாஸ்ட் பார்ன்” டேட்டே Zolani “Last Born” துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினரும் நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சரும் தெரிவித்துள்ளனர். 38 வயதான டேட்டே, எம்தான்சேனே (Mdantsane) நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தடைந்தபோது, முகமூடி அணிந்த இரு ஆயுதமேந்திய நபர்கள் வாகனத்திலிருந்து இறங்கி அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதுகுறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் கேட்டன் […]

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான சாத்தியமான வழிகள் மற்றும் பங்களிப்புகள் குறித்து ஆலோசிக்க, நேட்டோ அமைப்பின் உயர்மட்டத் தளபதி இந்த வாரத் தொடக்கத்தில் காணொளி வாயிலாகக் கூட்டம் ஒன்றை நடத்தினார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க புதிய கூட்டணி: NATO தளபதிகள் ஆலோசனை

  • August 22, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான சாத்தியமான வழிகள் மற்றும் பங்களிப்புகள் குறித்து ஆலோசிக்க, நேட்டோ அமைப்பின் உயர்மட்டத் தளபதி இந்த வாரத் தொடக்கத்தில் காணொளி வாயிலாகக் கூட்டம் ஒன்றை நடத்தினார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். மேலும், இது நேட்டோவின் நேரடி இராணுவ நடவடிக்கை (NATO Mission) அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். நேட்டோ கூட்டமைப்பின் உயர்மட்டத் தளபதியும், அமெரிக்க விமானப்படை ஜெனரலுமான அலெக்ஸஸ் கிரின்கேவிச்சின் செய்தித் […]

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் 30,923 அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வு இலங்கை செய்தி

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் 30,923 அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வு

  • August 22, 2026
  • 0 Comments

மாகாண சபைகளினால் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. மாகாண மட்டத்தில் தற்போது 30,923 அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் முன்னேற்றம் மற்றும் அவற்றில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், கல்வி, சுகாதாரம், விவசாயம், […]