இலங்கை செய்தி

இலங்கையில் அடை மழை: 17 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு: மூவர் பலி!

  • May 23, 2026
  • 0 Comments

இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 14 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 17 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 622 குடும்பங்களை சேர்ந்த 17 ஆயிரத்து 736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவர் உயிரிழந்துள்ளனர்.357 வீடுகள் பகுதியளவும், 8 வீடுகள்முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 57 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 912 பேரும், கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து 569 குடும்பங்களைச் […]

அரசியல் இலங்கை செய்தி

சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு தமிழரசுக் கட்சியும் வலியுறுத்து!

  • May 23, 2026
  • 0 Comments

இலங்கை ரூபாவின் பெறுமதி சரிவு உட்பட பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராய்வதற்காக அனைத்து கட்சி குழு கூட்டத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் நேற்று (22) நாடாளுமன்றத்தில் வலியுறுத்தின. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கயந்த கருணாதிலக்கவும், தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் நாடாளுமன்றக்குழுத் தலைவருமான சாணக்கியனுமே இந்த கோரிக்கையை விடுத்தனர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று முன்தினம் அனைத்து எதிரணிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற கூட்டத்திலும், சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

உலகம் செய்தி

ஈரானின் கோரிக்கைகளை ட்ரம்ப் கட்டாயம் ஏற்க வேண்டும்!

  • May 23, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஈரானின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Reza Talaei-Nik எச்சரித்துள்ளார். ஈரானிய மக்களின் உரிமைகளை அமெரிக்கா அங்கீகரிக்கத் தவறினால், அது அந்நாட்டிற்கு மேலும் பல தோல்விகளை மட்டுமே தரும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய மோதல்களில் இருந்து அமெரிக்கா தப்பிக்க வேண்டுமானால், அது போர்க்களத்திலும் இராஜதந்திர ரீதியிலும் ஈரானின் நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். இந்த மோதலைத் தொடர்வது […]

உலகம்

சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு : 82 பேர் பலி

  • May 23, 2026
  • 0 Comments

வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த விபத்தில் சிக்கி மேலும் 9 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு வெடிப்பு சம்பவித்த தருணத்தில், 247 தொழிலாளர்கள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

அரசியல் இலங்கை செய்தி

” பிரபாகரனை உயிருடன் பிடிக்கும் திட்டம் இருக்கவில்லை”

  • May 23, 2026
  • 0 Comments

“பிரபாகரனை உயிருடன் பிடிக்கும் திட்டம் இருக்கவில்லை. புலிகள் அமைப்பை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடனேயே திட்டங்களை வகுத்தேன்.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டார் எனக் கூறப்படுவது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ புலிகளை உயிருடன் பிடித்து அவர்களுடன் பேச்சு நடத்தும் நோக்கில் நான் போர் வியூகம் […]

ஆஸ்திரேலியா செய்தி

காசா விடயத்தில் பிரிட்டன் இரட்டை வேடம்!

  • May 23, 2026
  • 0 Comments

காசா விவகாரத்தில் பிரிட்டன் வெளிவிவகாரச் செயலர் Yvette Cooper இரட்டை வேடம் போடுகின்றார் என்று சர்வதேச சட்ட நிபுணரும், மனித உரிமை சட்டத்தரணியுமான Tayab Ali விமர்சித்துள்ளார். காசாவின் சுகாதாரக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது என Yvette Cooper கவலை வெளியிட்டுள்ள நிலையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தேவை என்று ஒருபுறம் பேசிக்கொண்டு, மறுபுறம் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை பிரிட்டன் வழங்கிவருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை பிரிட்டன் அரசு […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கையில் பொருளாதார நெருக்கடியா? நிதி அமைச்சு கூறுவது என்ன?

  • May 23, 2026
  • 0 Comments

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகும் தகவல்களை நிதி அமைச்சு முற்றாக நிராகரித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மேற்படி தகவல்களை நிராகரித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “இலங்கையில் 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்டதுபோல பொருளாதார நெருக்கடி தற்போது மீண்டும் ஏற்படப்போகின்றது என பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. 2022 இல் […]

உலகம் செய்தி

அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் Tulsi Gabbard ராஜினாமா!

  • May 23, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநராக பணியாற்றி வந்த துளசி கப்பார்ட், (Tulsi Gabbard ) தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கணவருக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை எலும்பு புற்றுநோய் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவரது பணியைப் பாராட்டியுள்ளதுடன், அவருக்குப் பதிலாக ஆரோன் லூகாஸ் தற்காலிகமாகப் பொறுப்பேற்பார் என்று தெரிவித்துள்ளார். Tulsi Gabbard பணிக்காலம் வெனிசுலா மற்றும் ஈரான் தொடர்பான விவகாரங்களில் பல்வேறு சர்ச்சைகளையும் விவாதங்களையும் சந்தித்தது. இராணுவத் […]

இலங்கை

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபர் பலி

  • May 23, 2026
  • 0 Comments

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவர், நேற்று (22) வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதன் காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளது.

இந்தியா செய்தி தமிழ்நாடு

பிரதமர் மோடியை அடுத்தவாரம் சந்திக்கிறார் விஜய்!

  • May 23, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் விஜய், அடுத்த வாரம் டெல்லிக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளார். முக்கியத்துவமிக்க அரசியல் சந்திப்புகளை நடத்தும் நோக்கிலேயே அவரது டெல்லி விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை, விஜய் சந்திக்கவுள்ளார். முதல்வராகப் பதவியேற்ற பிறகு, ஸ்டாலின், வைகோ , சீமான் உள்ளிட்ட தலைவர்களை விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார். அடுத்த […]