செய்தி

சிறைச்சாலை மோதல்: அறிக்கை கோருகிறது நீதி அமைச்சு

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கையொன்றை இன்றைய தினமே தனக்கு வழங்குமாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, சிறைச்சாலை திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் இருவர் பலியாகியுள்ளனர். 38 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 10 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என நீர்கொழும்பு வைத்தியசாலை தரவுகள் தெரிவிக்கின்றன.

படுகாயம் அடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடைய குழுவொன்றுக்கும், போதைப்பொருளுக்கு எதிரான குழுவுக்கும் இடையில்தான் மோதல் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி