ஸ்பெயினில் மதுபான விடுதி இடிந்து விழுந்து விபத்து – 11 பேர் மருத்துவமனையில்
ஸ்பெயினின் லா ரியோஜாவில் (La Rioja) உள்ள மதுபான விடுதி ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் 25 முதல் 30 பேர் வரை உள்ளே சிக்கிக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான விடுதியின் தரைத்தளம் இடிந்து விழுந்ததாகவும், அதைத் தொடர்ந்து மேற்கூரையும் இடிந்து விழுந்ததாகவும் உயிர் பிழைத்தவர்கள் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



