அனோஜனை நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும் – அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை
தனது சமூக ஊடகக் கணக்கில் முகமது நபியை அவமதிக்கும் செய்தியைப் பதிவிட்டதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் அனோஜன் சிவராசாவை, கருத்துச் சுதந்திர உரிமையின் அடிப்படையிலேயே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால், உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை விடுத்துள்ளது. சவூதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததற்காக மட்டும் யாரும் சிறையில் அடைக்கப்படவோ அல்லது மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படவோ கூடாது என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் […]



