ஐரோப்பா

போலந்துக்கு கிரிபென் ரக போர் விமானங்களை வழங்கும் சுவீடன்

சுவீடன் அடுத்த மாதம் முதல் ‘கிரிபென்’ (Gripen) ரக போர் விமானங்களை போலந்துக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.

நேட்டோ (NATO) வான்வெளி கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானங்கள் நேட்டோவின் வான் மற்றும் ஏவுகணைப் பாதுகாப்புக்கு வலுசேர்ப்பதுடன், உக்ரைனுக்கு இராணுவ மற்றும் சிவில் உதவிகளை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் போலந்தில் உள்ள தளவாட மையத்தை பாதுகாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-ல் நேட்டோவில் இணைந்த சுவீடன், 2025-ஆம் ஆண்டிலும் இப்பணிக்குத் தனது போர் விமானங்களை வழங்கியுள்ளது.

ஸ்வீடிஷ் பாதுகாப்பு நிறுவனமான ‘சாப்’ (Saab) தயாரித்த இந்த போர் விமானங்கள், இப்பணியில் பங்களிக்கும் அதே வேளையில், முக்கியமாக சுவீடனிலிருந்தே இயக்கப்படும் என்று அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்