இலங்கை

இலங்கை ரூபாவின் மதிப்பில் திடீர் மாற்றம்!

கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாவின் மதிப்பு, கடந்த வெள்ளிக்கிழமை   2.7 வீதத்தால் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக ‘Bloomberg’ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இது, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னர் ரூபா பதிவு செய்த மிகப்பெரிய ஒருநாள் வளர்ச்சியாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அன்றைய தினம் ஆசியாவிலேயே மிகச் சிறந்த முறையில் செயல்பட்ட நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிடமிருந்து இலங்கைக்கு நிதி கிடைக்கவுள்ள நிலையில், சந்தையிலுள்ளவர்கள் தங்களிடமுள்ள டொலர்களை விற்பனை செய்ய முற்பட்டதே ரூபாய் வலுவடைந்தமைக்கு காரணமாக கூறப்படுகிறது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!