Consent Preferences
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

கறுப்பு ஜுலைக் கலவரம்: விசாரணைக்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைப்பு

1983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

1983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல் ராஜ் தலைமையில் இந்தத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (28) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் தாக்கங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, அது தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது இந்தக் குழுவின் முக்கிய பொறுப்பாகும்.

அத்துடன், தேசிய நல்லிணக்கத்தையும் இனங்களுக்கிடையிலான சகவாழ்வையும் வலுப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதுடன், அக்கால வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளையும் ஆராயவுள்ளது.

அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தெரிவுக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள்

1. அமைச்சர் சரோஜா போல் ராஜ் – தலைவர்
2. அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
3. பிரதி அமைச்சர் எரங்க குணசேகர
4. பிரதி அமைச்சர் முனீர் முலாபர்
5. நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்
6. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
7. நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன்
8. நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி
9. நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்க
10. நாடாளுமன்ற உறுப்பினர் சேன நாணயக்கார
11. நாடாளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க
12. நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணி விஜேசிங்க

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளே ‘கறுப்பு ஜூலை’ என அழைக்கப்படுகின்றன.

இந்த வன்முறைகளில் பெருமளவானோர் உயிரிழந்ததுடன், தமிழர்களுக்குச் சொந்தமான சொத்துகள் அழிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்.

இலங்கையின் பல தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு முக்கிய திருப்புமுனையாகவும் கறுப்பு ஜூலை சம்பவங்கள் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை