இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடக சந்திப்பு
Sri Lanka Workers Congress media conference
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்(Senthil Thondaman) இன்றைய தினம் கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகமான சௌமிய பவனில் ஊடக சந்திப்பு ஒன்று நடத்தியுள்ளார்.
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 4 லட்சம் குடும்பங்களுக்கு மறைந்த முன்னாள் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான்(Soumiyamurthy Thondaman) அவர்களின் நினைவாக “சௌமிய தான யாத்திரா”(Sawmiya Dhana Yatra) என்ற திட்டத்தினூடாக வடக்கில் பருத்தித்துறையில்(Point Pedro) இருந்து தெற்கில் தெய்வேந்திர முனைவரை(Deivendra Point) உள்ள அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் உலர் உணவு நிவாரண பொதியை வழங்க இருப்பதாக இதன்போது குறிப்பிட்டுள்ளார்.





