செய்தி விளையாட்டு

இந்தியாவிற்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27ந் தேதி நடக்கிறது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையின் அணியின் கேப்டனாக அசலங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தனஞ்ஜெயா மற்றும் மேத்யூஸ் அணியில் இடம் பெறவில்லை. சதீர சமரவிக்ரம மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோரும் அணியில் இருந்து வெளியேறினர்.

இந்தியாவுக்கு எதிரான இலங்கை டி20 அணி:-

சரித் அசலங்க (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனகா, வணிந்து ஹசரங்கா, துனித் வெல்லலகே, மகேஷ் தீக்ஷனா, சமிந்து விக்ரமசிங்க, மதீஷ பத்திரனா, நுவான் துஷாரா, துஷ்மந்த சமீரா, பினுர பெர்னாண்டோ.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி