சதர்ன் வாட்டர் நிறுவனத்திற்கு 2.4 மில்லியன் பவுண்ட்ஸ் அபராதம் விதிப்பு
சதர்ன் வாட்டர் Southern Water நிறுவனத்திற்கு பிராம்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2.4 மில்லியனுக்கும் அதிகமான பவுண்ட்ஸ் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2019 மற்றும் 2021-க்கு இடையில் கென்ட்டில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மாசுப்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காகவே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மற்றும் ஒரு டீசல் கசிவு ஆகியவை ஸ்வாலிக்ளிஃப் புரூக் Swalecliffe Brook, ஃபேவர்ஷாம் க்ரீக் Faversham Creek மற்றும் விட்ஸ்டபிள் துறைமுகத்தை மாசுபடுத்தியதுடன், சுமார் 70 மீன்களைக் கொன்றன. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் […]




