உலகம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரை திரும்பப் பெற்றது சோமாலியா

ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரை 72 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு சோமாலிய அரசாங்கம் இன்று  உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், சோமாலியாவின் இறையாண்மையை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அபுதாபியில் இருந்த தனது தூதரையும் சோமாலியா திரும்பப் பெற்றுள்ளது.

“சோமாலியா மீதான படையெடுப்பில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒத்துழைக்கும் எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அந்நாட்டின் தகவல் அமைச்சர் அப்திஃபதா காசிம் மொஹமது Abdifatah Kasim Mohamud அறிவித்துள்ளார்.

அதேநேரம் “சோமாலியர்களின் இறையாண்மை, பாதுகாப்பு, நிலம் மற்றும் ஒற்றுமைக்கு எதிரான ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிப்படையான படையெடுப்பிற்கு எதிராக, அனைத்து சோமாலியர்களும் தங்கள் நாட்டைப் பாதுகாக்கவும் ஒன்றுபடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்