இலங்கை செய்தி

மாலதி நினைவேந்தல் விசாரணை: செல்வராசா கஜேந்தினிடம் விசாரணை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரரான இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான விசாரணைக்காக, யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவில் நாளை வெள்ளிக்கிழமை முன்னிலையாகவுள்ளதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தமை தொடர்பில் ஊடகங்களால் வினவப்பட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் இன்று பிற்பகல் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த செல்வராசா கஜேந்திரன் மேலும் கூறுகையில்:-

“அம்பாறையில் இன்று முன்னெடுக்கப்பட்ட மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வுக்காக நான் சென்றிருந்தவேளை, நேற்று எனது வீட்டில் இந்த அழைப்பாணை வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வை முடித்த பின்னர் விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுவதாகப் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக, தற்போது யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருக்கின்றேன். நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவில் நேரில் முன்னிலையாகி விசாரணைக்கு முகம்கொடுக்கவுள்ளேன்” என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை