உக்ரைனுக்கு ஆதரவு கரம் நீட்டும் பிரித்தானியா – £260 மில்லியன் உதவி தொகுப்பு அறிவிப்பு
உக்ரைனுக்கு 1000இற்கும் மேற்பட்ட தொலைதூர தாக்குதல் ட்ரோன்களை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
பெர்லினில் இன்று பிற்பகல் நடைபெறும் ‘விருப்பமுள்ளவர்களின் கூட்டணி’ கூட்டத்தில், பிரதமர் ஆண்டி பர்னம் உக்ரைனுக்கு £260 மில்லியன் மதிப்பிலான உதவி தொகுப்புகளை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் முக்கியமானது இந்த தொலைதூர தாக்குதல் ட்ரோன்கள்.
இதனைத் தொடர்ந்து ஒரே அடியில் இலக்குகளைத் தரைமட்டமாக்கும் திறன் கொண்ட கனரகப் போர்க்குண்டுகளைச் சுமந்து செல்லும் தாக்குதல் ட்ரோன்களும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேலதிக ஆதரவு அறிவிப்பு, உக்ரைனின் முன்னணிப் படைகளுக்கு ஊக்கமளிப்பது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளையும் வாய்ப்புகளையும் உருவாக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது 80 சதவீதமான நிதி இந்த ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்பத்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.




