ஆசியா விளையாட்டு

SLvsPAK Test – பாகிஸ்தான் அணிக்கு 131 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற பாகிஸ்தான் அணிக்கு இன்றும் 83 ஓட்டங்கள் பெற வேண்டியுள்ளது.

போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்சில் 131 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுக்களை இழந்து 48 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 461 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் நான்காம் நாளான இன்று சகல விக்கெட்டுகளையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சர்பாக Dhananjaya de Sliva 82 ஓட்டங்களையும் Nishan Madushka 64 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் Noman Ali, Abrar Ahmed ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்படி, பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 131 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் இறுதி நாளான நாளை 7 விக்கெட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content