விளையாட்டு

SLvsBAN – முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வி

இலங்கை அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

சிட்டகொங்கில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 255 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் Janith Liyanage அதிகபடியாக 67 ஓட்டங்களையும், அணியின் தலைவர் Kusal Mendis 59 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Shoriful Islam, Taskin Ahmed, Tanzim Hasan Sakib ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதன்படி 256 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 44.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

(Visited 3 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content