பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயனுடன் அதிதி பாடிய பாடல் ரிலீஸ் ஆனது – வீடியோ இணைப்பு

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் மாவீரன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஜூலை மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

மாவீரன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி தற்போது மாவீரன் படத்தின் 2-வது சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. டூயட் பாடலான இதை நடிகை அதிதி ஷங்கரும், நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்து பாடி உள்ளனர்.

வண்ணாரப்பேட்டையில என தொடங்கும் இப்பாடலுக்கு பரத் சங்கர் இசையமைத்து உள்ளார். இப்பாடல் வரிகளை யுகபாரதி எழுதி உள்ளார்.

சிவகார்த்திகேயனும் அதிதியும் போட்டி போட்டு பாட்டு பாடும் காட்சிகள் அடங்கிய இப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி யூடியூப்பில் செம்ம வைரலாகி வருகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்