பென்சில்வேனியாவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08 பேர் பலி
பென்சில்வேனியாவின் ஈரி (Erie) நகரில் நேற்றைய தினம் பாரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதில் கர்ப்பிணிப் பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 08 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்தாரியும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிர் மாய்த்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்தாரி பற்றிய விவரங்களை பொலிஸார் வெளியிடவில்லை. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தருவதற்கு முன்பே அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதேநேரம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஒன்பது பேரில் எட்டு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் குடும்ப நண்பர் என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




