ஐரோப்பா

வடகொரியாவிற்கும் – சுவிஸர்லாந்திற்கும் இடையே மீண்டும் மோதல் – தூதரகத்தை மூட பரிசீலனை

உக்ரைனின் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து குழந்தைகளை இடமாற்றம் செய்தமைக்காக வடகொரியாவின் குழந்தைகள் முகாம் மீது சுவிட்ஸர்லாந்து அரசாங்கம்   தடை விதித்துள்ளது.

இந் நடவடிக்கைக்கு வடகொரியா கண்டம் தெரிவித்துள்ளதுடன், அங்குள்ள சுவிஸ் தூதரகத்தை மூடுவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.

சுவிட்சர்லாந்தின் இந்தத் தடைகள் நாட்டின் இறையாண்மையை மீறுவதாகவும், பியோங்யாங்கிற்கு எதிரான விரோதப் போக்கைக் காட்டுவதாகவும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் செல்வாக்கு மிக்க சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நம்பகத்தன்மையற்ற சுவிட்சர்லாந்துடனான உறவுகளை முழுமையாக மறுபரிசீலனை செய்வது அவசியம் என்று நான் கருதுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சுவிட்ஸர்லாந்து அரசாங்கம், “எங்களின் உலகளாவிய வெளியுறவுக் கொள்கைக்கு இணங்க” தூதரக அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து தங்களின் தடைக் கொள்கை சுதந்திரமானது எனத் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்