டிக்டொக்கை அணுகுவதில் சிக்கல் – பயனர்கள் முறைப்பாடு
பிரித்தானியா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான டிக்டொக் பயனர்கள், சமூக ஊடகத் தளத்தில் ஏற்பட்ட பரவலான இடையூறுகளால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
டவுன்டிடெக்டர் (Downdetector) என்ற கண்காணிப்புத் தளம், ஏராளமானோர் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சில பயனர்கள் செயலியை அணுகுவதில் சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
கூடுதல் தொழில்நுட்பக் கோளாறுகள், சுயவிவரங்கள், பதிவுகள், மறுபதிவுகள் மற்றும் சேமிக்கப்பட்ட விருப்பப்பட்டியல்களை அணுகுவதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விளக்கமளித்து டிக்டொக் நிறுவனம், சிறிய தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டதாகவும் தற்போது செயலி வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேநேரம் பாதிக்கப்பட்ட பயனர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளது.




