உலகம்

இசாயாஸ் புயல் எதிரொலி – நால்வர் பலி, இலட்சக்கணக்கானோர் மின்சாரம் இன்றி தவிப்பு

அமெரிக்காவில் ‘இசாயாஸ்’ (Isaias) புயல் கரையைத் கடந்ததை தொடர்ந்து நால்வர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் வலுவிழந்து ‘வெப்பமண்டலத்திற்குப் பிந்தைய சூறாவளி’யாக (post-tropical cyclone) மாறிய நிலையிலும், புளோரிடா, அலபாமா, ஜார்ஜியா மற்றும் மிசிசிப்பி ஆகிய மாநிலங்களில் அதன் தாக்கம் நீடிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்களில் 6,70,000 குடியிருப்பாளர்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாகவும், மேலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று வீசுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீவிர காற்றின் காரணமாக வீடுகளின் மீது மரம் முறிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் புளோரிடாவில் மின்சாரத்தை மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்காக 16000 மின்சாரப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  மீட்புக் குழுக்கள் சேதங்களை மதிப்பிட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்