உலகம்

செக் குடியரசில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

செக் குடியரசில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிராகிலிருந்து (Prague)  180 கி.மீ (112 மைல்கள்) தென்கிழக்கில் உள்ள நமெஸ்ட் நாட் (Namest nad ) ஒஸ்லாவோவில் (Oslavou)  உள்ள ராணுவத் தளத்தில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதனால் மூன்று பேர்  மிதமான காயங்களுடன் ப்ர்னோவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், லேசான காயங்களுடன் ஒருவர் ஜிஹ்லாவாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இராணுவம் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிப்பில்,  “காயமடைந்த வீரர்களுக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் சாத்தியமான அனைத்து கவனிப்பையும் ஆதரவையும் வழங்குவதே இப்போது எங்களின் முதன்மையான முன்னுரிமையாகும்,” என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

“உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்