வட அமெரிக்கா

அமெரிக்காவில் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, 4 பேர் காயம்

அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் மர்ம நபர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு, 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அடிக்கடி அங்கு பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது.கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஒஹையோ மாகாணத்தின் போல்வார்டு பகுதியில் செயல்பட்டு வரும் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் நேற்று மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்திய நேரப்படி நேற்று இரவு நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாகாண பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.அப்போது தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அறிவித்துள்ள காவல் துறையினர், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content