ஐரோப்பா

மன்னரின் முடிசூட்டுவிழாவிற்கு அழைக்கப்பட்டுள்ள ஒரே இந்திய நடிகை

பிரித்தானிய மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு அழைக்கப்பட்டுள்ள விருந்தினர்களில் இந்திய நடிகை ஒருவரும் உள்ளார்.

மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவில் கலந்துகொள்ள பல நாட்டு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பல நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு ராஜ குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் துணை ஜனாதிபதியான Jagdeep Dhankharக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு இந்திய நடிகையும், நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், சோனம் நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்க இருக்கிறார்.அதாவது, வெளிநாடுகளில், நிகழ்ச்சிகளில் spoken word performance என்றொரு விடயம் உண்டு. அது கவிதை அல்லது சுவையான சிற்றுரை ஒன்றை ஆற்றும் விடயமாகும்.

சோனம், மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவில், காணொளி வாயிலாக நடைபெறும் காமன்வெல்த் இசைக்குழுவினரை அறிமுகப்படுத்தும் வகையில் சிற்றுரை ஒன்றை ஆற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்