இலங்கை

சலுகை அல்ல உரிமைகளே வேண்டும்: பட்ஜட் உரையில் சாணக்கியன் முழக்கம்

"இந்தக் கார்த்திகை மாதத்தில் எமது மக்கள் இழந்துள்ள உறவுகளின் ஆன்மாக்கள் எதிர்பார்ப்பது சலுகைகளையும் பாலங்களையும் அல்ல, மாறாக உரிமையினையே!" என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

“இந்தக் கார்த்திகை மாதத்தில் எமது மக்கள் இழந்துள்ள உறவுகளின் ஆன்மாக்கள் எதிர்பார்ப்பது சலுகைகளையும் பாலங்களையும் அல்ல, மாறாக உரிமையினையே!” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மீதான முதல் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நடுத்தர மக்களுக்கு நேரடியாகக் கிடைத்துள்ள நன்மைகள் என்ன என்பதை ஆராய வேண்டும். நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், வாழ்க்கைச் செலவுகளும் சடுதியாக உயர்ந்துள்ளன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்ற போதிலும், அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எவையும் இந்தப் பாதீட்டில் எடுக்கப்படவில்லை.

2028 மற்றும் 2029 ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள தேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசு தற்போதைய நிவாரணங்களைத் தவிர்த்துள்ளனர். திறைசேரியில் நிதி இருந்தும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடடனடியாக நிவாரணம் வழங்கப்படாமை ஏமாற்றமளிக்கின்றது.

இந்த வரவு – செலவுத் திட்டம் அரசின் கொள்கைத் திட்டத்தின் வெளிப்பாடாக அமைந்தபோதிலும், ஜனாதிபதி தனது உரையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைகள் குறித்து ஒரு வார்த்தைகூடக் குறிப்பிடவில்லை. பொறுப்புக்கூறல், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகவும் எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறவில்லை.

இது கார்த்திகை மாதமாகும். எமது உறவுகளை நாம் நினைவுகூர வேண்டிய மாதம். மாவீரர் துயிலும் இல்லங்களைத் துப்புரவு செய்து மக்கள் தமது உறவுகளை நினைவுகூரும் வேளையில், வடக்கு மற்றும் கிழக்கில் பாலங்களைக் கட்டுவதற்கான முன்மொழிவுகளை முன்வைத்துவிட்டு, தமிழ் மக்களின் அபிலாஷைகளை அலட்சியப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” – என்றார்.

வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்காக கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை தமிழ் மக்களின் காணிகளையும் விவசாய நிலங்களையும் அழித்து பிறிதொரு சமூகத்துக்கு நீர் விநியோகத்தை வழங்குவதற்காகவே எனவும், மயிலத்தமடு – மாதவனை பகுதி விவகாரங்கள் தொடர்பாகவும் அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்