இலங்கை செய்தி

பவுசர் ஒன்று பாறையில் கவிழ்ந்து விபத்து

ஹல்துமுல்ல பத்கொட பிரதேசத்தில் எரிபொருள் பவுசர் ஒன்று பாறையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து ஹப்புத்தளை நோக்கி 33,000 லீற்றர் டீசல் ஏற்றிச் சென்ற பௌசர் இன்று (06) அதிகாலை 1.45 மணியளவில் 50 அடி உயரமுள்ள குன்றின் மீது கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளதுடன், விபத்தில் பௌசரின் சாரதி மற்றும் உதவி சாரதி ஆகியோர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின் பின்னர் பௌசரில் வெளியிடப்பட்ட எரிபொருளை எடுத்துச் செல்வதற்காக பிரதேசவாசிகள் ஒன்று திரண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பௌசரின் சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

priya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை