ஐரோப்பா

பிரித்தானியாவில் கடும் குளிரான வானிலை – இரவில் மைனஸ் டிகிரிக்கு மாறும் வெப்பநிலை

பிரித்தானியாவில் வானிலை மிகவும் குளிராக மாறியுள்ளதாக மெட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அலுவலகத்தின் கணிப்புப்படி, பல பகுதிகளில் இரவு நேர வெப்பநிலை மைனஸ் 6 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வார இறுதியில் இரவு நேர வெப்பநிலையானது மைனஸ் 4 முதல் மைனஸ் 6 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், சனிக்கிழமை காலைக்குள் பரவலான உறைபனி (frost) ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் நாட்டின் மேற்கு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும், வடமேற்கு ஸ்காட்லாந்தில் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வானிலை நிலைமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள மெட் அலுவலகத்தின் துணைத் தலைமை வானிலை ஆய்வாளர் ஸ்டீவன் கீட்ஸ், “வானிலை அடிக்கடி மாறக்கூடியதாக இருக்கும்; மழை, பனி கலந்த மழை (sleet) மற்றும் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது.” என்றார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்