ஐரோப்பா

பிரிட்டன் – அமெரிக்காவிற்கு இடையிலான விமான சேவைகளில் பாதிப்பு : 31 விமானங்கள் இரத்து

அமெரிக்கா முழுவதும் வான் போக்குவரத்து அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக லண்டனிலிருந்து புறப்படும் மற்றும் உள்வரும் விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் பிராந்திய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தகவல் தொடர்பு சிக்கல்களைத் தொடர்ந்து, “அசாதாரண சூழ்நிலைகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக”, அமெரிக்க கூட்டாட்சி விமான நிர்வாகம் (FAA) நாடு முழுவதும் விமான சேவைகளை 04 மணிநேரத்திற்கு  முடக்கியது.

இந்நிலையில் அமெரிக்காவிற்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 10,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ‘ஃபிளைட்ரேடார்24’ (Flightradar24) தெரிவித்துள்ளது.

தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. என்றாலும் விமானம் புறப்படுவதில் தாமதங்கள் நீடிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று காலை (சனிக்கிழமை) 9.45 மணி நிலவரப்படி, ஹீத்ரோ விமான நிலையத்தின் இணையதளத்தில், அமெரிக்காவிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் 31 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 20 விமானங்கள் தாமதமாகியுள்ளதாகவும் காட்டப்பட்டது.

கேட்விக் விமான நிலையத்தில், புளோரிடாவின் ஆர்லாண்டோவிலிருந்து காலை 7.30 மணிக்கு வரவிருந்த மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனிடையே சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (UK Civil Aviation Authority), பயணிகளுக்கு “தொடர் பாதிப்புகள்” (follow-on disruption) ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் நுகர்வோர் இயக்குனர் டிம் ஜான்சன், “அமெரிக்க விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று முன்பதிவு செய்யும் பணிகளாலும், அனைத்து சேவைகளையும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் முயற்சியாலும் தொடர்ந்து சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்