பொழுதுபோக்கு

மானத்தை வாங்கிய சனம் ஷெட்டி.. கமல் தான் கெஞ்சினாரா?

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சனம் ஷெட்டி விமர்சித்து வரும் நிலையில், தொடர்ந்து கமல்ஹாசனின் ஹோஸ்ட் சரியில்லை என்றும் விமர்சித்து வருகிறார்.

இதனால், கடுப்பான மக்கள் நீதி மய்யம் தொண்டர் போட்ட ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்த சனம் ஷெட்டி, மக்கள் நீதி மய்யத்தையும் அதன் தலைவர் கமல்ஹாசனையும் டோட்டல் டேமேஜ் செய்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட சனம் ஷெட்டியை ரசிகர்கள் மக்கள் நாயகி என கொண்டாடினர். கடைசி வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவர் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டது நியாயமே கிடையாது என அப்போதே எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில், அதே போல இந்த சீசனில் பிக் பாஸில் இருந்து அதை விட மோசமாக ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருகிறார் சனம் ஷெட்டி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் நீதி மய்யத்தில் சேர சனம் ஷெட்டி கெஞ்சினார் என்றும் கமல்ஹாசன் சனம் ஷெட்டியை உள்ளே சேர்க்காமல் துரத்தி விட்டார் என்றும் அந்த காண்டில் தான் இப்படி தொடர்ந்து கமலுக்கு எதிரான பேச்சுக்களை சமூக வலைதளங்களில் சனம் ஷெட்டி பேசி வருகிறார் என ஆதித்யா ராகவ் எனும் கமல் ரசிகர் பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதிலடி கொடுத்த சனம் ஷெட்டி,

நீங்க ஒருத்தரே போதும் மக்கள் நீதி மய்யத்தை எக்ஸ்போஸ் செய்ய என பதிவிட்ட சனம் ஷெட்டி யாரு யாரிடம் கெஞ்சினார் என விசாரியுங்க என பதிவிட்டுள்ளார். சனம் ஷெட்டி இப்படியொரு ட்வீட்டை போட்ட நிலையில், அப்போ கமல் தான் உங்க கிட்ட கட்சியில சேர்ந்துக்கோங்கன்னு கெஞ்சினாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்