பொழுதுபோக்கு

சினிமா துறை நாறிப் போய் உள்ளது… சனம் ஷெட்டி

சமீபத்தில் டிவி நடிகை ஸ்ருதி நாராயணின் ஆபாச வீடியோ வெளியாகி வைரலானது. இதற்கு நடிகை ஷர்மிளா, பாடகி சின்மயி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழில் அம்புலி உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுவருமான நடிகை சனம் ஷெட்டி தனது ஆதங்கத்தை கொட்டி உள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛ஸ்ருதி நாராயணின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோ உங்களிடம் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள்.

இது தனிப்பட்ட விஷயம் கிடையாது. இது ஒரு வியாபாரம். காஸ்டிங் கவுச் என்கிற பெயரில் நடத்தப்படும் திட்டமிட்ட ஒரு செயல்.

ஆடிஷன் என்ற பெயரில் என்னனாலும் கேட்பீர்களா. இத்தனை பெண்களின் சாபத்தை சம்பாதித்து ஒரு படத்தை எடுத்து நீங்கள் நல்லா இருப்பீங்களா. அது போலியான வீடியோ என ஸ்ருதி கூறுகிறார். அது உண்மை என்றால் அவர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு பக்கம் பிரபலங்களின் வாரிசுகளாலும், இதுபோன்ற காஸ்டிங் கவுச்சாலும் என்னைப் போன்ற பல நடிகைகளுக்கு இன்று சினிமா வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

சினிமாவில் இருக்கும் பெரிய மனிதர்களே aஉங்கள் சினிமா துறை நாறிப் போய் உள்ளது. முதலில் அதை சுத்தம் செய்யுங்கள். நடிகைகளுக்கு பாதுகாப்பு, மரியாதை, நியாயமான பட வாய்ப்புகள் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்