இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது சம்பந்தனின் பூதவுடல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடல் நாளை கொழும்பில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

யாழ். தந்தை செல்வா அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அன்னாரின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதன்பின்னர் அன்னாரின் புகழுடல் விமானம் மூலம் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.

இதேவேளை, சம்பந்தனின் புகழுடல் நேற்றுக் காலை முதல் இன்று மதியம் வரை பொரளை ஏ.எப். றேமண்ட்ஸ் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அன்னாரது புகழுடலுக்கு நேற்று முதல் இன்று வரை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, சம்பந்தன் படித்த பாடசாலைகளில் ஒன்றான யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினர் அன்னாரின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை திருகோணமலையில் அன்னாரது இல்லத்தில் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று மாலை 4 மணியளவில் அன்னாரது புகழுடல் தகனக்கிரியைக்காகத் திருகோணமலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை