ஈரான் தொடர்பில் அமெரிக்கா முன்மொழிந்த யோசனைக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு!
ஹார்முஸ் நீரிணையில் ஈரான் மேற்கொண்டுள்ள தடையை நிறுத்தக் கோரி அமெரிக்கா மற்றும் பஹ்ரைன் ஐ.நாவில் முன்மொழிந்த தீர்மானத்தை ரஷ்யா கடுமையாக எதிர்த்துள்ளது.
மேற்படி தீர்மானத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்திய ரஷ்யா, அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் வன்முறையற்ற தீர்வுகளை வலியுறுத்தும் ஒரு மாற்றுத் திட்டத்தை சீனாவுடன் இணைந்து முன்வைத்துள்ளது.
வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் முயற்சிக்கு ஆதரவு அளித்தாலும், ஐநா பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடாக ரஷ்யா தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
தற்போதைய சூழலில் அமெரிக்காவின் இந்த வரைவுத் தீர்மானத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என்று ரஷ்யா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.





