போரை முடிவுக்கு கொண்டுவர மத்திய கிழக்கை நாடுகிறது அமெரிக்கா
ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு மத்திய கிழக்கு நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி வலியுறுத்தியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் நன்மையடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஈரான் ஆட்சியால் தாக்குதல் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதால், அந்த நாடுகளின் பாதுகாப்பும் மேம்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புளூம்பெர்க் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலின்போதே நிக்கி ஹேலி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், வளைகுடா நாடுகள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஈரான் மீதான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் எனக் கோருவதாகவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.




