உலகம்

கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம் – எல்லையில் சார்ஜன்ட் உயிரிழப்பு

வட கொரிய எல்லைக்கு அருகில் பணியமர்த்தப்பட்ட சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது.

இருப்பினும் இந்தச் சம்பவம் இரு கொரிய நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுடன் தொடர்புடையதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

செப்டம்பர் 21 அன்று இராணுவமயமற்ற மண்டலத்தில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் மூன்று தென் கொரிய வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பியோங்யாங் கண்ணிவெடியைப் பதித்துள்ளதாக  சியோல் குற்றம் சாட்டியுள்ளது, இந்தக் குற்றச்சாட்டை வட கொரியா மறுத்துள்ள நிலையில் இந்த உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை வடகொரியா சமீபகாலமாக எல்லைப் பகுதிகளில் ஆயுதங்களை குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்