UKவில் வீட்டு வாடகை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் – 200,000 குடும்பங்கள் தவிப்பு
பிரித்தானியாவில் வீட்டு வாடகை உதவித்தொகையை குறைக்கும் அல்லது முடக்கும் அரசாங்கத்தின் முடிவால் சுமார் 200,000 குடும்பங்கள் பாதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த முடிவால் குடும்பங்கள் வறுமை அல்லது ஆழ்ந்த வறுமைக்குள் தள்ளப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமர் ஆண்டி பர்னமிற்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், இந்த முடக்கம், தெருக்களில் உறங்குவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவரது வாக்குறுதியை கடுமையாகப் பலவீனப்படுத்துகிறது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதை நீக்க £1.7 பில்லியன் செலவழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சந்தை வாடகைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், வீட்டு வாடகை உதவித்தொகைக்கும் வாடகைக்கும் இடையே லண்டனில் மாதத்திற்கு சுமார் £200 பற்றாக்குறையாக உள்ளது.
அதேபோல் பிரித்தானியாவின் பிற பகுதிகளில் மாதத்திற்கு £100 பற்றாக்குறை ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் ஜோசப் ரவுன்ட்ரீ அறக்கட்டளையின் ஆய்வின்படி, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், 2029-ஆம் ஆண்டுக்குள் தனியார் வாடகைதாரர்கள் ஆண்டுக்கு சுமார் £700 வரை இழப்பைச் சந்திப்பார்கள் என குறிப்பிட்டுள்ளது.




