ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரும் தீர்மானம் : வாக்கெடுப்பு இரத்து!
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை, அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சித் தலைவர்கள் நேற்று இரத்து செய்துள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இதற்கு முன்னர் 03 முறை குடியரசுக் கட்சியினரின் ஏறக்குறைய ஒருமித்த ஆதரவுடன், வாக்கெடுப்பை தடுத்திருந்தது.
அமெரிக்க அரசியலமைப்பின்படி, ஜனாதிபதி அல்ல, காங்கிரஸே போரை அறிவிக்க முடியும். இதனை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் கட்சியினரும், குடியரசு கட்சியினரும், இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தைப் பெற வலியுறுத்தினர்.
ஒரு தெளிவான உத்தியை வகுக்காமல், டிரம்ப் நாட்டை ஒரு நீண்டகால மோதலுக்குள் தள்ளியிருக்கலாம் என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஆரம்பத்தில் குடியரசு கட்சியினர் அதிக ஆதரவை வழங்கி வந்த நிலையில் பின் நாட்கள் செல்ல செல்ல ஆதரவு குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




