ஸ்டார்மரின் தலைமையை கேள்விக்குட்படுத்துவது முட்டாள்தனமானது என விசனம்
பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக மாட்டார் என கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறைக்கான செயலாளர் Lisa Nandy தெரிவித்துள்ளார்.
பிரதமரின் தலைமையை கேள்விக்குட்படுத்துவது முட்டாள்தனமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ஸ்டார்மரின் பிரதமர் பதவி சவாலுக்கு உட்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளி வரும் நிலையில் Lisa Nandy இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மக்கள் பிரதமருக்கு சவால் விடுக்க விரும்பினால் அதற்கான அதிகாரப்பூர்வ நடைமுறை உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அரசு தனது பணியைத் தொடர்ந்து திறம்பட செய்ய வேண்டும் என கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறைக்கான செயலாளர் Lisa Nandy தெரிவித்துள்ளார். வலியுறுத்தினார்.





