ஐரோப்பா

பிரான்ஸில் பொது போக்குவரத்திற்கான கட்டணங்கள் அதிகரிப்பு!

பிரான்ஸ் தலைநகரில் பொது போக்குவரத்திற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 20 முதல் மெட்ரோ டிக்கெட் விலை 85%க்கும் அதிகமாக உயரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.  இதன்படி ஒரு டிக்கெட்டின் விலை €2.15 (£1.85) இலிருந்து €4 (£3.43) ஆக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நகரப் பேருந்து டிக்கெட்டின் விலை €2.50 (£2.15) இலிருந்து €5 (£4.29) ஆக இரட்டிப்பாகும்.

இது ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு நடைமுறைக்கு வரும் என்றும் செப்டம்பர் 8 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் போக்குவரத்து பாஸ்களின் விலை அப்படியே இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டண அதிகரிப்பானது பிரான்ஸ் செல்லும் சுற்றுலா பயணிகளை பாதிக்கும் என்பதுடன், ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலம் என்பதால் பார்வையாளர்கள் குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்